இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி சிறுமி: துடித்துப்போன குடும்பம்
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்த தாக்குதலில் சிறுமி உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீனத்தின் அல்-குத்ஸ் படைப்பிரிவின் தளபதியான தைசிர் அல்-ஜபரி, காசாவின் மையப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், அவரை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்த தாக்குதலில் தைசிர் அல் - ஜபரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். 55 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தில், அலா குதும் என்ற சிறுமியும், அவளது தந்தையும் குடியிருப்புக்கு அருகில் கடைக்கு சென்றுக் கொண்டிருக்கும்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி கொல்லப்பட்டுள்ளனர்.
5 வயதேயான சிறுமி அலா குதும் சண்டைக்கு சென்றாரா? அப்பாவிச் சிறுமி பரிதாபமாக கொல்லப்பட என்ன செய்தார்? என்று குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் ஜெருசலேமில் அல் அக்ஸா மசூதியில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் உருவாகியது. அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் இவ்விவகாரத்தில் தலையிட்டு இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்தின. இந்த நிலையில், பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.