இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் காசாவில் 10 பேர் பலி
காசா நகரின் சைடவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
காசாவில் உள்ள அல் அவ்தா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனை அருகே நுசிராத் அகதிகள் முகாமில் பத்திரிகையாளர்கள் படம்பிடித்து கொண்டிருந்தபோது, அவர்களின் வாகனம் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.