இஸ்ரேலிய படையினர் மருத்துவமனைக்குள் நுழைந்து ஈவிரக்கமின்றி தாக்குதல் ; பாராட்டிய அமைச்சர்
இஸ்ரேலிய படையினர் மேற்குகரையில் மருத்துவமனையொன்றிற்குள் நுழைந்து மூவரை சுட்டுக்கொன்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிகின்றன.
மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள இபின் சின மருத்துவமனைக்குள் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் போல நுழைந்த இஸ்ரேலிய படையினர், மூன்று பாலஸ்தீனிய இளைஞர்களை சுட்டுக்கொன்றதாக இஸ்ரேலிய பாலஸ்தீன தகவல்கள் தெரிவித்துள்ளன.
மூவர் சுட்டுக்கொலை
தாதிமார்கள் , ஹிஜாப்அணிந்த பெண்கள் மருத்துவர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய விசேட படைப்பிரிவினர் மருத்துவமனைக்குள் நுழைவதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன.
மருத்துவமனைகள் நுழைந்த இஸ்ரேலிய படையினர் , ஒவ்வொருவராக மூன்றாவது தளத்திற்கு சென்று இரண்டு இளைஞர்களை கொலை செய்தனர் என மருத்துவமனைக்குள் காணப்பட்டவர்களை மேற்கோள்காட்டி பாலஸ்தீன அரச செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பை சேர்ந்தவர்களே கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளதை, இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளார்.
அதோடு சமீபத்தில் குறிப்பிடத்தக்க பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்ட மருத்துவமனைக்குள் மறைந்திருந்த முகமட் ஜலாம்னே என்பவரே கொல்லப்பட்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மேலும் ஜெனின் பட்டாலியனை சேர்ந்த ஜெனின் முகாமை சேர்ந்த முகமட் அல் கஜாவியும் அவரது சகோதரரும் கொல்லப்பட்டனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.