பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலியர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்

Sulokshi
Report this article
பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் யூதர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மியாமியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோர்ட்டெச்சேய் பிரவ்மன் என்ற 27 வயது தனதுவாகனத்திலிருந்து இறங்கி துப்பாக்கி பிரயோகம் செய்வதை கண்காணிப்பு கமராக்கள் காண்பித்துள்ளதாக அவரை கைதுசெய்வதற்காக விடுக்கப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
17 தடவைகள் துப்பாக்கி பிரயோகம்
பிரவ்மன் 17 தடவைகள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார், இருவருக்கு காயங்களை ஏற்படுத்தினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட பின்னர் இது குறித்து தெரிவித்துள்ள மோர்ட்டெச்சேய் பிரவ்மன் தான் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தவேளை இரண்டு பாலஸ்தீனியர்களை பார்த்ததாகவும் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு அவர்களை கொன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுடப்பட்டவர்கள் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் என மியாமி ஹெரால்ட் தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் வெறுப்புணர்வு குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டினை சுமத்தவேண்டும் என அமெரிக்க இஸ்லாமிய உறவுகளிற்கான பேரவையின் புளோரிடா பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.