உலகின் மிக மோசமான நாளாக கின்னஸ் சாதனை படைத்த நாள்
வாரத்தில் மிகவும் மோசமான நாள் திங்கட்கிழமை என்று கின்னஸ் உலக சாதனை (Guinness World Records) அமைப்பு டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பணிக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல், பாடசாலை செல்லும் மாணவர்கள் வரை அனைத்து தரப்பினரும் திங்கட்கிழமையை வெறுக்கின்றனர்.
சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கட்கிழமை அலுவலகம் பாடசாலைகளுக்கு செல்வோரின் முகங்களில் சோகத்தை துல்லியமாகப் பார்க்க முடியும். உலக மக்களின் இந்த சோகத்தை கின்னஸ் உலக சாதனை அமைப்பும் பகிர்ந்து கொண்டுள்ளது.
டுவிட்டர் பதிவு
பல்வேறு உலக சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் நிலையில் அந்த அமைப்பின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த திங்கட்கிழமையன்று ‘திங்கள்’ சோகம் பகிரப்பட்டுள்ளது.
“வாரத்தின் மிகவும் மோசமான நாள் திங்கட்கிழமை என்பதை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்” என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பு டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
இது குறித்து டுவிட்டர்வாசிகள் தங்கள் கருத்துகளை நகைச்சுவையுடன் பதிவிட்டு வருகின்றனர்.