இலங்கையில் பல்கலைக் கழக மாணவரிடையே ஏற்பட்ட மோதல்!
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மூன்றாம் வருட மாணவர்கள் அதிகம் வசிக்கும் வீடொன்றில் இடம்பெற்ற மோதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை துடுப்பாட்ட போட்டியில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியின்றி இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கோப்பாய் பொலிஸார் தலையிட்டு நிலைமையை சமரசம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விடுமுறை நாட்களில் இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்காவிட்டாலும் பெரும்பாலான மாணவர்கள் காவல்துறை அனுமதியுடன் இந்நிகழ்ச்சியை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.