இசைவிருந்து நிகழ்ச்சியில் பகீர் சம்பவம்... காயங்களுடன் தப்பிய மாணவர்கள்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மாணவர்களுக்கான இசைவிருந்து நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னெடுக்கப்பட்ட விருந்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
உள்ளூர் நேரப்படி ஞாயிறு பகல் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 100ல் இருந்து 250 மாணவர்கள் வரையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் துப்பாக்கிச் சூடு முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 9 மாணவ்ர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். சம்பவம் நடந்த ஜாஸ்பர் கவுண்டியின் முக்கிய அதிகாரிகளில் சிலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், ஜாஸ்பர் உயர்நிலைப் பள்ளி அல்லது நியூட்டன் உயர்நிலைப் பள்ளி மாணவர்களே அந்த விருந்தில் கலந்துகொண்ட பெரும்பாலானோர். பாதிக்கப்பட்டவர்கள் 15 முதல் 19 வயதுடைய மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், உயிராபத்து இல்லை எனவும் 8 பேர்கள் ஒரு மருத்துவமனையிலும் ஒருவருக்கு சம்பவயிடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விசாரணை முதற்கட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்ட ஜாஸ்பர் கவுண்டி ஷெரிப் மிட்செல் நியூமன், இந்த தாக்குதலுக்கான நோக்கம் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் பின்னர் வெளியிட வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, ஜாஸ்பர் நகரில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் காணப்பட்ட ஒரு வாகனம், மாணவர்களுக்கான இசைவிருந்து கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போதும் காணப்பட்டதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.