அமெரிக்க நாடாளுமன்றத்தில் சென்ட் சபையை கைப்பற்றியது ஜோ பைடன் கட்சி!
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை, செனட் சபைகளுக்கு கடந்த 8ம் திகதி தேர்தல் இடம்பெற்றது..
பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களும், செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.
பிரதிநிதிகள் சபையில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் (Donald Trump) குடியரசு கட்சி 211 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை நெருங்கியது.
ஜனநாயக கட்சி 204 இடங்களை பெற்றது. சென்ட் சபையை அதிபர் ஜோ பைடனின் (Joe Biden) ஜனநாயக கட்சி கைப்பற்றியது. அக்கட்சி 50 இடங்களை பெற்றுள்ளது.
குடியரசு கட்சி வசம் 48 இடங்கள் உள்ளன. இரு கட்சிகள் இடையே கடும் இழுபறி நிலவிய நிலையில் நெவாடாவில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றதால் சென்ட் சபையை கைப்பற்றியது.