தகாத உறவு காரணமாக றொரன்டோ மேயருக்கு ஏற்பட்ட நிலை
தகாத உறவு காரணமாக றொரன்டோ நகர மேயர் ஜோன் டோரி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பெருந்தொற்று காலப் பகுதியில் தனது பணியாளர் ஒருவருடன் தகாத உறவு பேணியதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நகரின் மேயர் என்ற ரீதியிலும் குடும்பஸ்தர் என்ற ரீதியிலும் தாம் நடந்து கொள்ளத் தவறியதாக டோரி ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த தொடர்பு தம்மால் இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயலுக்காக வருந்துவதாகவும் மன்னிப்பு கோருவதாகவும் ஜோன் டோரி தெரிவித்துள்ளார்.
தனது மனைவி மற்றும் குடும்பத்தாரிடமும் இந்த தவறுக்காக மன்னிப்பு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
68 வயதான ஜோன் டோரி கடந்த 2014ம் ஆண்டு றொரன்டோவின் மேயராக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜோன் டோரி இதுவரையில் தனது ராஜினாமா கடிதத்தை அதிகாரபூர்வமாக ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.