இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இரு பெண்கள் அதிரடி கைது!
இலங்கையில் உள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு பெண்களும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் எந்தவித சட்ட அனுமதியும் இன்றி சுற்றுலா விசாவின் கீழ் ஓமானுக்கு செல்வதற்காக வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு பெண்களும் இன்றைய தினம் (17-11-2023) காலை 09:25 மணிக்கு WY 372 விமானத்தில் பயணிப்பதற்கு முயற்சித்துள்ளனர்.
பெண் இருவரும் விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சாவடிக்கு அருகில் செல்லும் பாதுகாப்பு வேலியினூடாக ஊடுருவ முயற்சித்ததாகவும் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகள் முயற்சியை தடுத்து இரு பெண்களையும் தமது காவலில் எடுக்க முயன்றனர்.
மேலதிக விசாரணைகளுக்காக இந்த இரண்டு பெண்களும் கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.