மறைந்த பாப்பரசர் பிரான்சிஸ் ; மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமாகியுள்ள நிலையில் அவரது மாத சம்பளம் தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போப் பிரான்சிஸ் மாதம்தோறும் 32,000 அமெரிக்க டொலர் சம்பளமாக பெற தகுதி பெற்றிருந்த போதும் தனக்கு சம்பளம் வேண்டாம் என மறுத்து அச் சம்பளத்தை தேவாலயங்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் நன்கொடையாக வழங்க செய்துள்ளார்.
மாத சம்பளம்
88 வயதான போப் பிரான்சிஸின் சுவாச பாதையில் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் திடீரென அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
2013 ஆம் ஆண்டு 16 வது போப் பெனெட்டிக் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபையின் 266 வது திருத்தந்தையாக போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போப் பிரான்சிஸை பொருத்தவரை அவருக்கு அந்தப் பதவிக்கென சம்பளம் இருக்கிறது. மாதம்தோறும் 32,000 அமெரிக்க டாலர் சம்பளமாக பெற தகுதி பெற்றவர்.
ஆனால் போப் பிரான்சிஸ் எனக்கு சம்பளம் வேண்டாம் என மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக அவருக்கு வந்த சம்பளத்தை தேவாலயங்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் நன்கொடையாக வழங்க செய்தார்.
இதற்கு முன்பு இருந்த எந்த போப்பும் செய்யாத ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. இவர் போப்பாக பதவியேற்பதற்கு முன்பாகவே கார்டினல் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். அப்போது கூட தனக்கு வழங்கப்பட்ட சம்பளங்களை வேண்டாம் என மறுத்துள்ளார்.