ஒன்றாரியோ பல்கலைக்கழக மாணவர்களின் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது
ஒன்றாரியோ பல்கலைக்கழக மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட செய்மதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
ஹமில்டன் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இந்த செய்மதியை உருவாக்கியுள்ளனர்.
இந்த செய்மதி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.
மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் 150 மாணவர்களும் ஆய்வாளர்களும் இணைந்து இந்த செய்மதியை உருவாக்கியுள்ளனர்.
பூமியின் வெளிப்புறப் பகுதியில் நிலவி வரும் கதிர்வீச்சை அளவீடு செய்யும் வகையில் இந்த செய்மதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கதிர்வீச்சினை அளவீடு செய்யக்கூடிய செய்மதிக்கு நியூடோஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
மிக்கு வெளியே விண்வெளி வீரர்கள் எதிர்நோக்கக் கூடிய பல்வேறு சவால்கள் பற்றி ஆய்ந்து அறிந்து கொள்ளும் நோக்கில்; இந்த செய்மதி வடிவமைக்கப்பட்டுள்ளது.