உக்ரைன் தூதரகத்தில் வெடித்த லெற்றர் வெடிகுண்டு: வெளிவரும் புதிய தகவல்
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் அமைந்துள்ள உக்ரைன் தூதரகத்தில் லெற்றர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில், அந்த கடிதத்தை கையாண்ட நபர் காயங்களுடன் தப்பியுள்ளதாக ஸ்பெயின் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லை எனவும், தாமாகவே அந்த நபர் மருத்துவமனைக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வெடித்த சம்பவத்தையடுத்து, சம்பவப்பகுதிக்கு விரைந்த அவசர உதவி சேவைகள் குழுவினர் மோப்ப நாய் உட்பட குறித்த தூதரகத்தில் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இச்சம்பவம் தொடர்பில் உக்ரைன் தூதரகம் சார்பில் இதுவரை மேலதிக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
தூதரகம் அமைந்துள்ள பகுதி மொத்தமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை என்றே தெரியவந்துள்ளது.