கொட்டிய மழையால் ஸ்தம்பித்த லண்டன்!
லண்டனில் இன்று காலை பெய்த கன மழையால் லண்டன் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சாலைகள் கடைகள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இன்று அதிகாலை பெய்த கனமழையால் மேற்கு லண்டனில் உள்ள நைட்ஸ்பிரிட்ஜில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது,
இதனால் உயர்நிலை ஷாப்பிங் மாவட்டம் என அறிப்படும் பகுதி முழங்கால் அளவுக்கு நீரில் மூழ்கியுள்ளது. அது மட்டுமின்றி நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் குறைந்தது நான்கு வழித்தடங்கள் ஓரளவு இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் தண்ணீர் தேங்குவதால் கடுமையாக தாமதமாகிவிட்டதாகவும் லண்டனுக்கான போக்குவரத்து நிர்வாகம் கூறியுள்ளது.
அத்துடன் சாலைகள் மொத்தமாக நீரில் மூழ்கியுள்ளதால் பாதசாரிகள் கடந்து செல்ல சிரமப்படும் அளவுக்கு நைட்ஸ்பிரிட்ஜில் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கியுள்ளது. மேலும் பொதுவாகவே பரபரப்பாக காணப்படும் வர்ட்நெல் தெரு உட்பட வடக்கே ஹாம்ப்ஸ்டெட்டில் வெள்ளப்பெருக்கு காரணமாக சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
Imperial Wharf ரயில் நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கென்சிங்டன் (ஒலிம்பியா) மற்றும் கிளாபாம் சந்திப்பு ரயில் சேவைகள் முடங்கியுள்ளது.
மேலும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சிக்னல் செயலிழப்பு காரணமாக பெருநகரம், மாவட்டம், பிக்காடிலி உள்ளிட்ட வழித்தடங்களில் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.