றொரன்டோவில் பட்ட பகலில் இடம்பெற்ற கோர கத்தி குத்து தாக்குதல்;ஒருவர் பலி
றொரன்டோவில் பட்ட பகலில் நபர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் றொரன்டோ நகர் டுன்டாஸ் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதியொன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகிய நபரை காப்பாற்றுவதற்கு முதலுதவி செய்யப்பட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது வேறும் தகவல்கள் தெரிந்தவர்கள் அது குறித்து பொலிஸாரிடம் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.