ஹாலிபிக்ஸில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஓருவர் பலி
கனடாவின் ஹாலிபிக்ஸ் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
31 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹாலிபிக்ஸ் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹாலிபிக்ஸின் பிரின்ஸ் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நடைபாதையில் சலனமற்று இருந்த குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ஹாலிபிக்ஸ் பொலிஸார் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.
டுவிட்டர் வழியாக இந்த இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹலிபிக்ஸின் பிரவுன்ஸ்விக் பகுதியில் சிலர் மோதிக் கொண்டதாகவும் இதன் போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை அரம்பித்துள்ளனர்.