கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஓருவர் பலி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் பர்னபி நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாலை 5.30 மணியளவில், கனடா வே (Canada Way) – ஸ்மித் அவென்யூ (Smith Avenue) சந்திப்புக்கு அருகே துப்பாக்கிச் சத்தம் கேட்கப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பலத்த காயங்களுடன் இருந்த ஒருவரை மீட்டுள்ளனர்.
உயிரைக் காப்பாற்ற முயற்சித்தபோதும், அந்த நபர் உயிரிழந்தார் என பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில், பக்ஸ்டன் ஸ்ட்ரீட் (Buxton Street) 5000-ஆம் தொகுதியில் எரிந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த வாகனம் இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதா என்பதை விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. இருப்பினும், இந்த துப்பாக்கிச் சூடு குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.