ஸ்காப்ரோவில் கத்திக்குத்து சம்பவம்! ஒருவர் உயிரிழப்பு
ஸ்காப்ரோவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கட்டடமொன்றின் வரவேற்பறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
க்ளென் எவரஸ்ட் மற்றும் கிங்ஸ்டன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் இருந்த நபரை பொலிஸார் மீட்டுள்ளனர்.
STABBING:
— Toronto Police Operations (@TPSOperations) August 20, 2022
Glen Everest Rd + Kingston Rd
* 11:40 am *
- In the lobby of a building
- Reports of someone stabbed
- Injuries reported as serious
- Police o/s
- Rush on Medics requested
- Emergency run to hospital
- Scene has been closed
- Will update#GO1608092
^dh pic.twitter.com/l89Gb0FGvB
குறித்த நபரை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த கத்தி குத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
ஸ்காப்ரோ பகுதியில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்தி குத்துச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.