ஒரே நாளில் 23 பற்கள் பிடுங்கப்பட்ட நபர் பரிதாபமாக உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம்
சீனா நாட்டில் ஒரே நாளில் 23 பற்கள் பிடுங்கப்பட்ட நபரொருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீன நாட்டின் ஜெய்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஜின்ஹுவா நகரில் யோங்காங் டேவே பல் மருத்துவமனையில் கடந்த ஓகஸ்ட் 19 ஆம் திகதி ஹூவாங் என்ற நபருக்கு மாற்று பற்கள் பொருத்தும் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சையின்போது அவரின் 23 பற்களும் பிடுங்கப்பட்டு அதே நாளில் 12 புதிய பற்கள் இம்மீடியேட் ரெஸ்டோரேஷன் [Immediate முறை இம்பிளாட் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து திரும்பிய அவர் இரண்டு வாரங்கள் கழித்து ஆகஸ்ட் 28 ஆம் திகதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது மகள் கடந்த சமூக வலைதளத்தில் தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உயிழந்தவரின் வயது வெளிப்படுத்தப்படவில்லை. இதுதொடர்பாக அந்த மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்படுவது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலர் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        