ரஷ்ய அதிபர் போல் உலா வரும் நபர் : அதிர்ச்சியில் மக்கள்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்(Vladimir Putin) தன்னைப் போலவே உருவ அமைப்பு கொண்ட நபரை வெளி உலகிற்கு பயன்படுத்துகிறார் என உக்ரைன் நாட்டு உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அத்தோடு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த உக்ரைனின் பாதுகாப்புதுறையின் உளவுப்பிரிவு அதிகாரியான கைரிலோ புடானோவ் (Kyrillo Budanov) இதுகுறித்து கூறியுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது 5 மாதத்திற்கும் மேலாக ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் உடல்நலம் குறித்து பல தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்துள்ளன.
மேலும் புடின் தன்னை போல தோற்றம் உள்ள நபரை பயன்படுத்தி வருவதாகவும், சமீபத்தில் வெளியான காணொளியில் அவரது உயரம் மற்றும் காதுகள் மிகவும் வித்தியாசமாக உள்ளன என்றும், நடை பாவனைகளை கூர்ந்து கவனித்தால் புடின் போலவே தோற்றம் கொண்ட இன்னொருவர் என்பது தெரியும் என்று உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார்.