கனடாவில் நாய் ஒன்றை துப்பாக்கியால் சுட்ட நபரை தேடும் பொலிஸார்
கனடாவின் நயாகரா பகுதியில் நாய் ஒன்றை துப்பாக்கியால் சுட்ட நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒரு வயதான நாய் ஒன்று கொல்லப்பட்டுள்ளது.
நாயகரா பிராந்திய பொலிசார் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைதுப்பாக்கி ஒன்றின் மூலம் குறித்த நாய் சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த நாயை மீட்டு பொலிஸார் சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த நாய் உயிர் இழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாயை துப்பாக்கியால் சுடும் நோக்கம் இருக்கவில்லை எனவும் தவறுதலாக துப்பாக்கி செயற்பட்டதில் நாய் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
26 வயதான அன்தனி அன்கோரி என்ற நபரே இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபருக்கு எதிராக வேறும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.