600 குழந்தைகளுக்கு தந்தையான நபர்; நீதிமன்றம் விதித்த தடை!
விந்தணு தானம் மூலம் 600இற்கும் மேற்பட்ட குழந்தையை பெற்றவருக்கு நெதர்லாந்து நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
600 குழந்தைகளுக்கு தந்தையானது எப்படி?
ஜோனாதன் ஜேக்கப் என்பவர் கடந்தை 2007 ஆம் ஆண்டிலிருந்து தனது விந்தணுக்களை தானம் செய்து வந்துள்ளார்.
இதன் மூலம் இவருக்கு 600 குழந்தைகள் இருக்கின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளது.
குழந்தைகள் இல்லாத பெண்களுக்கு தனது விந்தணுக்களை தானம் செய்து குழந்தை பெற்றெடுக்க உதவி செய்வதால் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
நாளடைவில் இதுவே இவரது தொழிலாகவும் மாறியுள்ளது.
நெதர்லாந்தின் சட்டம்
நெதர்லாந்து சட்டித்தின்படி விந்தணு தானம் மூலம் ஒரு நபர் 12 மேற்பட்ட பெண்கள் கருத்தரிப்பிற்கு காரணமாக இருக்கக் கூடாது.
அதே வேளையில் 25 குழந்தைகளுக்கு மேல் தந்தையாக இருக்க முடியாது.
நெதர்லாந்து நாட்டில் 11 சேர்க்கை கருத்தரிப்புமையங்கள், மற்ற நாடுகளில் இரண்டு மையங்கள் என 13 மையங்களின் மூலமாக ஜோனாதன் தனது விந்தணுவை தானம் செய்துள்ளார்.
இந்த விபரங்கள் பற்றி யாருக்கும் கூறாமல் தானம் செய்தே வந்துள்ளார். இவர் மூலம் கருபிரசவித்த பெண் ஒருவர் இந்த தகவல் தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஆகவே கடந்த 2017 ஆம் ஆண்டு செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இனிமேல் ஜோனாதனின் ஜேக்கப் விந்தணுக்களை தானம் செய்யக் கூடாது எனத் தடை விதித்ததுள்ளது.
இதனால் ஏற்படப்போகும் கவலைக்குரிய விடயம்
ஒரே மரபணுக்களின் பரிணாம வளர்ச்சியின் மூலம் பல நாடுகளில் பல குழந்தைகள் வாழந்து வருகின்றன. ஒரே தந்தையின் கீழ் பல குழந்தைகள் இருப்பதால், இவர்களுக்கே தெரியாமல் திருமணபந்தத்தில் இணைந்தால் அது சகோதர உறவு என்பது தெரியாமல் ஆகிவிடும் என்பது கவலைக்குரிய விடயமாகும்.
பின்னர் ஒருக்கட்டத்தில் தெரியவந்தால் இவர்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி உளரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள்.
இனிமேல் இவர் யாருக்கும் விந்தணு தானம் செய்யக்கூடாது என நினைத்து அந்த பெண் ஹாக் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதன்படி, இந்த வழக்கு குறித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்ட நாளிலிருந்து ஜோனாதன் ஜேக்கப் யாருக்கும் இனிமேல் விந்தணு தானம் செய்யக்கூடாது. தனது சேவை தொடர்பாக இனிமேல் விளம்பரப்படுத்தவும் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
ஒருவேளை இவர் நீதிமன்றத்தின் தடையை மீறினால் ஒரு லட்சம் யூரோக்கள் செலுத்தப்பட வேண்டும் கட்டளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
GETTY IMAGES