மாட்டு இறைச்சி சாப்பிட மாடு வளர்க்கும் உலகப் பிரபலம்!
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெட்டா நிறுவனங்களின் தலைவருமான மார்க் ஜூக்கர்பெர்க் தனது வலைதள பக்கத்தில் மாட்டுக்கறி சாப்பிடும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், ஹவாயில் உள்ள பண்ணையில் மாடுகளை வளர்க்க தொடங்கி உள்ளேன். உலகின் உயர்ந்த தரமான மாட்டிறைச்சியை உருவாக்குவதே எனது குறிக்கோள் என கூறி உள்ளார்.
மார்க் ஜூக்கர்பெர்க்கின் பண்ணையில் மாடுகளுக்கு மக்காடாமியா உணவுகளை சாப்பிட கொடுப்பதாகவும், குடிப்பதற்கு பீர் வழங்குவதாகவும் கூறி உள்ளார்.
அதுஅம்ட்டுமல்லாது மாடுகளுக்கான பீர் பண்ணையிலேயே உருவாக்கப்பட்டு கொடுக்கப்படுவதாகவும், பண்ணையில் மரங்களை நடுவதற்கும், விலங்குகளை பராமரிப்பதற்கும் தனது மகள்கள் உதவுகிறார்கள் எனவும் மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மாட்டுக்கறி சாப்பிடும் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.