ஒரே நாளில் ஏற்பட்ட மாற்றம்; ரொப் 10 பணக்காரர்களில் இருந்து நீக்கப்பட்ட மார்க் ஸக்கர்பர்க்!
ஒரே நாளில் மார்க் ஸக்கர்பர்க் (Mark Zuckerberg) பெரும் தொகையை இழந்ததால் அவர் ரொப் 10 பணக்காரர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பேஸ்புக்கை நிர்வகிக்கும் Meta நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் (Mark Zuckerberg) ஒரே நாளில் தமது சொத்து மதிப்பில் 29 பில்லியன் அமெரிக்க டொலரை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Meta நிறுவனத்தின் பங்கு விலை ஒரே நாளில் 26 வீதம் சரிந்ததில் அதன் மதிப்பு வரலாறு காணாத சரிவைக் கண்டது. அதில் ஒரே நாளில் நிறுவனத்தின் மதிப்பு 250 பில்லியன் அமெரிக்க டொலர் குறைந்தது.
இது உலகளவில் தொழில்நுட்பத் துறையை உலுக்கியுள்ளது. இதனால் உலகின் முதல் 10 பணக்காரர்கள் வரிசையில் இருந்து ஸக்கர்பர்க் (Mark Zuckerberg) நீக்கப்பட்டார்.
இந்நிலையில் மார்க் ஸக்கர்பர்க் (Mark Zuckerberg) தற்போது அவர் 12வது இடத்தில் உள்ளார்.
அதேவேளை இந்தியாவின் முகேஷ் அம்பானியும், கௌதம் அதானியும் உலகின் முதல் 10 பணக்காரர்கள் வரிசையில் 11ஆம் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.