சிட்னியின் சிபிடியில் பாரிய தீ விபத்து; அச்சத்தில் மக்கள்
சிட்னியின் சிபிடியில் பலதளங்களை கொண்ட கட்டிடமொன்று தீப்பிடித்ததை தொடர்ந்து பல கட்டிடங்களிற்கு தீபரவியுள்ளது.
இதன் காரணமாக நகரில் பெரும்புகைமண்டலத்தை காணமுடிகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகர் முழுவதும் புகை மண்டலம்
சென்டிரல் ஸ்டேசனிற்கு பின்னால் உள்ள கட்டிடமொன்று முற்றாக எரியுண்டுள்ளது. இந்நிலையில் தீயை அணைக்க பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்துவதாக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
அதோடு 100க்கும் மேற்பட்ட தீயணைப்புபடைவீரர்களும் 20க்கும்மேற்பட்ட தீயணைப்பு படைவாகனங்களும் தீயை கட்டுப்படுத்த முயல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருகட்டிடம் தீயினால் முற்றாக சேதமடைந்து விழப்போகின்ற நிலையில் ஏனைய கட்டிடங்களுக்கும் தீ பரவத்தொடங்கியுள்ளதாக பொதுமக்கள் வசிக்கும் தொடர்மாடிகளும் ஆபத்தில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.