சீரற்ற காலநிலையால் அட்லாண்டிக் கனடாவில் பாரிய பாதிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக அட்லாண்டிக் கனடாவில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புயல் காற்றுடனான மழை வெள்ளம் பாதைகளுக்கும் பெருந்தெருக்களுக்கும் பாரிய சேதத்தை விளைவித்துள்ளது.
இதேவேளை நோவா Nova Scotia மற்றும் Newfoundland ஆகிய பகுதிகளில் பாரிய அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாது அவதிப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடை மழை வெள்ளம் காரணமாக விநியோகச் சங்கிலிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், சில பிரதான பாதைகளில் போக்குவரத்துக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.