மைக்ரோசாப்ட் மீண்டும் அதிரடி ; ஆயிரக்கணக்கானவர்கள் பணி நீக்கம்
கணினி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், இந்த ஆண்டில் 4-வது முறையாக மீண்டும் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.
நேற்று ஏராளமானவர்களுக்கு பணிநீக்க நோட்டீசுகளை அனுப்பத் தொடங்கியது. எவ்வளவு பேர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
ஆயிரக்கணக்கானவர்கள் பணி நீக்கம்
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஒரு சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. கடந்த மே மாதத்தில் மேலும் 6 ஆயிரம் பேரும், கடந்த ஜூன் மாதம் 305 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் வெளியான பணிநீக்க அறிவிப்புகள் அதன் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
புளூம்பெர்க் நிறுவன அறிக்கையின்படி இந்த முறை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 9 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் எனறு தெரியவருகிறது.