மத்திய கிழக்கு பதற்றத்தால் உலக எரிசக்தி சந்தையில் மாற்றம்
வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையிலும், ஈரானிய இராணுவத் தளம் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பின்னர், உலக எரிசக்தி சந்தையில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், மசகு எண்ணெய் விலைகளும் உயர்வைக் கண்டுள்ளன.

அதன்படி, இன்றைய தினம் அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.
முந்தைய வர்த்தக அமர்வில் 5.55 சதவீத வீழ்ச்சியைக் கண்டிருந்த WTI ரக மசகு எண்ணெய் விலை, இன்று 1.42 டொலர் அல்லது 1.6 சதவீத உயர்வடைந்து, ஒரு பீப்பாயின் விலை 90.10 டொலராகப் பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலை காரணமாக உலக சந்தைகளில் எரிசக்தி விலைகள் தொடர்ந்து மாற்றமடைந்து வருவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.