உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு எந்த இடம் தெரியுமா?
உலகில் மிக சக்தி வாய்ந்த நாடுகளின் பாஸ்போர்ட்டில், இந்த முறையும் மூன்றாவது ஆண்டாக ஜப்பான் முதல் இடத்தையும், கனடா 9-வது இடத்தையும் பிடத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகில் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியாகும், அந்த வகையில் இந்த ஆண்டு சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின்(Air Transport Association ) பதிவுகளைப் பயன்படுத்தி,ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்(Henley Passport Index ) நிறுவனம் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என்பது, எந்த நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு விசா இல்லாமல் அதிக நாடுகளுக்குச் சென்று வர முடியுமோ அல்லது ஒரு நாட்டில் சென்று இறங்கிய பிறகு விசா பெறுவது போன்றவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. போதும் என்பதின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது இருப்பினும் கடந்த ஆண்டு கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்ததால், அந்தளவிற்கு விமானப் போக்குவரத்து பயன்பாட்டில் இல்லை. இருப்பினும் இந்த ஆண்டும் ஜப்பான் முதல் இடத்தை பிடித்துள்ளது.
ஜப்பானிய குடிமக்கள் தற்போது விசா இல்லாமல் 191 நாடுகளுக்கு செல்ல முடியும். இதற்கு அடுத்த படியாக சிங்கப்பூர் குடிமக்கள் 190 நாடுகளுக்கு பயணிக்க முடியும். மூன்றாவது இடத்தில் ஜெர்மனி மற்றும் தென் கொரியா உள்ளன.
இவை இரண்டும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு 189 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குகின்றன.
இதில், பிரித்தானியா 7-வது இடத்தை பெல்ஜியம், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவுடனும், பிரான்ஸ் 6-வது இடத்தை அயர்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சுகள், சுவிடனும் பகிர்ந்து கொண்டுள்ளன.
கனடா 9-வது இடத்திலும், ஹங்கேரி 10-வது இடத்திலும் உள்ளன.