3 வயது மகனை கொல்ல ஆள்தேடிய தாயார்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
அமெரிக்காவில் பெண் ஒருவர் தன் 3 வயது மகனை கொல்லை கூலிக்கு ஆள் தேடிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மாணவர்கள் ஆயுதங்கள் பயன்படுத்துவது, போதைப்பொருள் பயன்பாடு என்பன அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அதிபர் பைடன் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில்,அமெரிக்காவில் பெண் ஒருவர் தன் 3 வயது மகனை கொல்ல கூலிக்கு ஒரு கொலையாளியை தேடி வந்துள்ளார்.
இதுபற்றி, அவர் ஒரு வலைதளத்தில் தேடியபோது, அந்த வலைதளம் வேடிக்கையாக உருவாக்கப்பட்டதால், வலைதளத்தை நடத்துபவர்கள் பெண் கொலையாளியை தேடிய தகவலை பொலிஸில் கூறிவிட்டனர்.
வார இறுதிக்குள் மகனைக் கொல்ல கூலிக்கு ஒரு கொலையாள் வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டு, தன் மகன், வசிப்பிடம் ஆகியவற்றையும் அதில் பகிர்ந்துள்ளார்.
அவரது வீட்டிற்கு பொலிஸார் கொலையாளி போல சென்று, கொலை செய்ய பேரம் பேசி ஒரு கொலைக்கு இதைச் செய்ய ஒப்புக் கொண்ட பின்னர், மீண்டும் அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, அவர் மீது வழக்குகள் பதிவு செய்து, பெண்ணை கைது செய்துள்ளனர்.
மேலும் குறித்த பெண் எதற்காக தன் மகனை ஏன் கொலை செய்ய திட்டமிட்டார் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.