இந்தோனேசியாவின் மராபி மலை வெடிப்பு : மலை ஏறுபவர்கள் 11 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் மராபி மலை வெடித்ததில் மலை இருப்பவர்கள் 11 பேர் உயிரிழந்ததாகவும் 12 பேரை காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு சுமத்ராவில் எரிமலை வெடித்தபோது எழுபத்தைந்து பேர் அப்பகுதியில் இருந்தனர் என்றும் அவர்களில் 26 பேர் அங்கிருந்து வெளியேற்றப்படவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மலையில் மொத்தம் 75 இருந்ததாக மீட்புப் பணியாளர்கள் கூறினார்.இதில், 12 பேர் இன்னும் காணவில்லை, அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம், 49 பேர் கீழே இறங்கிவிட்டனர், அவர்களில் சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மலையில் இருப்பவர்கள் பாதுகாப்பாக கீழே கொண்டு வருவதற்கு மீட்புக் குழுக்கள் இரவு முழுவதும் பணியாற்றி வருகின்றன எனவும் கூறப்படுகிறது.