அவுஸ்திரேலியாவில் பல வாகனங்கள் மோதி கோர விபத்து
அவுஸ்திரேலியாவில் எட்டு வாகனங்களுக்கு மேல் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். குயின்லாந்தில் இடம்பெற்றுள்ள பல வாகனங்கள் தொடர்புபட்ட விபத்தொன்று இடம்பெறுள்ளது.
அதேவேளை இந்த விபத்தில் அமெரிக்காவின் டாங்கிகளை கொண்டு சென்றுகொண்டிருந்த வாகனமும் சிக்குண்டுள்ளது.
விபத்து பகுதி விசேட வலயமாக பிரகடனம்
விபத்தில் அமெரிக்காவின் ஏபிரகாம் டாங்கிகளை ஏற்றிச்சென்ற டிரக்கும் சிக்குண்டுள்ளது என்பதை அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களம் உறுதி செய்துள்ளது.
எட்டு வாகனங்களுக்கு மேல் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய காவல்துறையினர் , நாங்கள் அந்த பகுதிக்கு சென்றவேளை மூன்று வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததாகவும் கூறியுள்ளனர்.
அத்துடன் மூன்று வாகனங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விபத்து ஏற்பட்ட பகுதியை காவல்துறையினர் விசேட வலயமாக பிரகடனம் செய்துள்ளனர்.
விபத்தில் ஆறுபேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அம்புலன்ஸ் சேவையினர், ஒருவர் கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.