மும்பை தாக்குதல் சூத்திரதாரி லக்விக்கு பாகிஸ்தான் விதித்த பரபரப்பு தீர்ப்பு
மும்பை தாக்குதல் சூத்திரதாரி மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தளபதி ஜாக்கி-உர்-ரெஹ்மான் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகளால் லக்வி விசாரிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த தீர்ப்பு வந்துள்ளது.
மும்பை தாக்குதல் வழக்கில் 2015 முதல் ஜாமீனில் இருந்த 61 வயதான ஐநாவால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதி லக்வி, பஞ்சாப் மாகாணத்தின் பயங்கரவாத தடுப்புத் துறையால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதனியடுத்து பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவது தொடர்புடைய விஷயங்கள் தொடர்பாக லக்வியை பஞ்சாப் பயங்கரவாத தடுப்புத்துறை விசாரித்தது.
“லக்வி ஒரு மருந்தகத்தை நடத்திக் கொண்டு, அதன் மூலம் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு நிதியை சேகரித்து வந்துள்ளார் என்றும், அவரும் மற்றவர்களும் இந்த மருந்தகத்திலிருந்து நிதி சேகரித்தனர்.
மேலும் இந்த நிதியை மேலும் பயங்கரவாத நிதியுதவிக்கு பயன்படுத்தினர்.
மேலும் இந்த நிதிகளை அவர் தனிப்பட்ட செலவுகளுக்கும் பயன்படுத்தியதாகவும் சி.டி.டி. தெரிவித்துள்ளது.
இதேவேளை முன்னதாக லக்வி 2008’ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா.வால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
மேலும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அல் கொய்தாவுடன் தொடர்புடையவர் என்பதற்காகவும் அவர் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது