கனடாவில் முஸ்லிம் குடும்பம் உயிரிழப்பு; வெளியான பகீர் பின்னனி
கனடாவில் வசிக்கும் பாகிஸ்தான் பின்னணியுடைய முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை , மத வெறுப்பால் தூண்டப்பட்டு 20 வயதான இளைஞன் இந்த தாக்குதலை நடத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான 20 வயதான நதானியேல் வெல்ட்மேன்(Nathaniel Weldman), ஒரு குடும்பத்தின் 9 முதல் 74 வயது வரையான 5 உறுப்பினர்களை தாக்கினார். தனது வாகனத்தை வேகமாக செலுத்தி சென்று அவர்கள் மீது மோதியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
“இது ஒரு திட்டமிட்ட, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல், வெறுப்பால் தூண்டப்பட்டது என்பதற்கான சான்றுகள் உள்ளதாக லண்டன் காவல் துறையின் துப்பறியும் கண்காணிப்பாளர் போல் வெயிட் (pol Waite) செய்தியாளர்களிடம் கூறினார். “பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமிய நம்பிக்கையின் காரணமாக குறிவைக்கப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம்,” என்றும் வெயிட் (pol Waite) கூறினார்.
டொரொன்டோவிலிருந்து தென்மேற்கே 200 கிலோமீட்டர் (120 மைல்) தொலைவில் உள்ள லண்டனில் உள்ள காவல்துறையினர், ரோயல் கனடிய மவுண்டட் பொலிஸ் மற்றும் சட்டத்தரணிகளுடன் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
சம்பவத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்ட லண்டனில் வசிக்கும் வெல்ட்மேன் மீது நான்கு எண்ணிக்கையிலான முதல் தர கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவர் திங்களன்று காவலில் வைக்கப்பட்ட பின்னர் வியாழக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். சந்தேக நபரிடம் கிரிமினல் பதிவு இல்லை, வெறுக்கத்தக்க குழுவில் உறுப்பினராக இருப்பது தெரியவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.
உடல் கவச வகை உடையை அணிந்திருந்த நிலையில் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவருக்கு எந்த கூட்டாளிகளும் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் சையத் அப்சால், 46, அவரது மனைவி மடிஹா சல்மான், 44, மற்றும் அவர்களது 15 வயது மகள் யும்னா அப்சால் ஆகியோர் உயிரிழந்ததாக லண்டன் ஃப்ரீ பிரஸ் தெரிவித்துள்ளது. சையத் அப்சாலின் 74 வயதான தாயும் (பெயர் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை) இறந்தார்.
இவர்களது 9 வயது மகன் ஃபாஸ் அப்சால் கடுமையான ஆனால் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை குறித்த குடும்பம் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து கனடாவுக்கு குடியேறியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        