சிலி நாட்டில் திடீரென உருவான பாரிய மர்ம குழி?
தென் அமெரிக்க நாடான சிலியில் திடீரென பாரிய மர்ம குழியொன்று உருவாகியுள்ளது.
கனிய வளம் அகழும் சுரங்கமொன்றிற்கு அருகாமையில் இந்த பாரிய குழி உருவாகியுள்ளது.
இந்த குழியின் விட்டம் 25 மீற்றர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சிலியின் தலைநகர் சான் டியாகோவிற்கு 655 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த சுரங்கத்திற்கு அருகாமையில் குழி உருவாகியுள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்த பாரிய குழி தொடர்பில் ஆய்வு செய்வதற்கு உடனடியாக அந்நாட்டு அரசாங்கம் நிபுணர்களை அனுப்பி வைத்துள்ளது.
கனடாவிற்கு சொந்தமான நிறுவனமொன்றினால் இந்த கனிய வள அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மர்மக் குழிசுமார் 200 மீற்றர் ஆழம் வரையில் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குழிக்கு சுமார் 600 மீற்றர் தொலைவில் வீடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.