ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த கப்பலில் மர்ம நபர்கள் செய்த சம்பவம்
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த கப்பல் ஒன்று, இனந்தெரியாத நபர்களினால் ஈரானிய கடல் எல்லைக்குள் பலவந்தமாக திசைதிருப்பப்பட்டுள்ளதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தகச் செயற்பாட்டு அமைப்பு இன்று (14) வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானிய கடல்சார் அதிகாரசபையின் தகவல்களின்படி, குறித்த கப்பலுக்குள் "அங்கீகரிக்கப்படாத நபர்கள்" அத்துமீறி நுழைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அக்கப்பல் அதன் வழக்கமான பாதையிலிருந்து மாற்றப்பட்டு, ஈரானிய கடல் பரப்பை நோக்கி கொண்டு செல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.