அடிக்கடி குட்டித் தூக்கம் போடுவோருக்கு ஏற்படக் கூடிய ஆபத்து
அடிக்கடி குட்டித் தூக்கம் போடுவோருக்கு உயர் குருதியழுத்தம் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இரவில் நித்திரை கொள்ளத் தவறியவர்கள் இவ்வாறு பகல் வேளைகளில் குட்டிடித் தூக்கம் போடுவதனை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு அதிகளவில் குட்டித் தூக்கம் போடுவது உடல் ஆரோக்கியத்திற்கு உசிதமானதல்ல என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரிசோனா மாநிலத்தின் பானர் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பகல் வேளையில் குட்டித் தூக்கம் போடுவோருக்கு உயர் குருதியழுத்தம் ஏற்படும் வாய்ப்புக்கள் 12 வீதம் அதிகம் எனவும், பக்கம் வாதம் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் 24 வீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 360000 பேரிடம் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.