உக்ரைனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நேட்டோ செயலாளர் நாயகம் ; புடின் கோபம்!
உக்ரேன் எதிர்காலத்தில் நேட்டோவின் அங்கத்துவ நாடாகும் என நேட்டோ செயலாளர் நாயகம் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் ( Jens Stoltenberg )இன்று கூறியுள்ளார்.
பின்லாந்துக்கு விஜயம் செய்துள்ள ஸ்டோல்டென்பேர்க் ( Jens Stoltenberg ), அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை கூறினார்.
உக்ரேன் நீடித்திருக்க வேண்டும்
நீண்ட காலத்தின்பின் நேட்டோவின் அங்கத்துவத்தை உக்ரேன் பெறும் என தெரிவித்த அவர் ( Jens Stoltenberg ), ஆனால், ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், ஒரு சுதந்திர நாடாக உக்ரேன் நீடித்திருக்க வேண்டும் என்பது உடனடியான முக்கிய விடயமாக உள்ளது எனவும் அவர் கூறினார்.
'உக்ரேன் எமது அங்கத்துவ நாடாக மாறும் என்பதில் நேட்டோ அங்கத்துவ நாடுகள் இணக்கம் கண்டுள்ளன. ஆனால், அது நீண்ட கால முன்னோக்கிலானது' எனவும் அவர் குறிப்பிட்டார்.
பின்லாந்து, சுவீடன் ஆகியனவும் நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்துள்ள நிலையில், நேட்டோ செயலாளர் நாயகம் ( Jens Stoltenberg ) பின்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் உக்ரேன் அங்கம் வகிக்கும் பின்லாந்து பிரதமர் சனா மரீன் நேற்றுமுன்தினம் கூறியிருந்த நிலையில், நேட்டோ செயலாளர் நாயகமும் அதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை நேட்டோவில் இணைய உகரைன் விருபம் தெரிவித்ததை அடுத்தே புடின் உக்ரைன்மீது போரை தொடுத்த நிலையில், அந்த போராட்டம் ஓராண்டை கடந்தும் தொடர்கின்ற நிலையில் உக்ரைன் மக்கள் உயிர், உடமைகள் என பெரும் இழப்பை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.