பிரான்ஸை பந்தாடிய இயற்கை; 6 பேர் பலி
பிரான்சின் கடல் கடந்த மாவட்டமான Corse தீவில், நேற்று இரண்டாவது நாளாக இயற்கை அனர்த்தம் பதிவானதால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
கடும் இடி மின்னல் தாக்குதல், புயல் மற்றும் கன மழை ஆகியவற்றால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. நேற்று மாலை Corse தீவினைச் சென்றடைந்த உள்துறை அமைச்சர் Gérald Darmanin சில தகவல்களை வெளியிட்டார்.
அதில் இந்த இயற்கை அனர்த்தத்தினால் இதுவரை ‘ஆறு பேர் மரணித்துள்ளதை உறுதி செய்தார். அத்துடன் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் நால்வர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
மேற்படி இயற்கை அனர்த்தம் தொடர்பாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் பிரதமர் Elisabeth Borne ஆகியோர் அவசர சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். விடுமுறைக்காக Brégançon (Var) துறைமுகத்தில் உள்ள ஜனாதிபதி மக்ரோனைச் சந்திக்க பிரதமர் நேற்று மாலை அங்கு பயணித்திருந்தார்.
இந்த சந்திப்பின் போது Corse தீவில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பாகவும், அங்கு தற்போது தேவையான நடவடிக்கைகள் குறித்தும் உரையாடப்பட்டது.
நேற்றைய இயற்கை அனர்த்தமானது இரண்டாவது நாள் அனர்த்தமாகும். அதேவேளை முன்னதாக புதன்கிழமை இரவு அங்கு ஏற்பட்டிருந்த இடி மின்னல் தாக்குதலில் பல வீடுகள் சேதமடைந்திருந்ததோடு, நால்வர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.