பிரித்தானியாவில் புதிய உள்துறை செயலாளர் நியமனம்!
பிரித்தானியாவின் புதிய உள்துறை செயலாளராக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ்(Grand Shops)நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறைச் செயலாளராக பணியாற்றிய சுயெல்லா பிரேவர்மேன் (Suella Braverman)தனது ராஜினாமாவை அறிவித்த பின்னர் புதிய உள்துறை செயலாளர் நிமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் லிஸ் ட்ரஸுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள தனது ராஜினாமா கடிதத்தில், ட்ரஸின் அரசாங்கத்தின் வழிகாட்டுதல் குறித்து தனக்கு கவலைகள் இருப்பதாகவும், அது கொந்தளிப்பான காலங்களை தாங்கிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வாரத்திற்குள் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய இரண்டாவது மூத்த அமைச்சர் பிரேவர்மேன் ஆவார்.
இவரின் பதவி விலகலை தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு மேலாக அதிகாரத்தில் இருக்க போராடும் ட்ரஸ் மீது இன்னும் அழுத்தம் அதிகரித்துள்ளது.
“நான் தவறு செய்துவிட்டேன், பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்; நான் ராஜினாமா செய்கிறேன், ”என்று பிரேவர்மேன்(Suella Braverman) ட்விட்டரில் டிரஸுக்கு எழுதிய கடிதத்தில் கூறினார்.
பிரேவர்மேன்(Suella Braverman) தனது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தை நாடாளுமன்ற சக ஊழியருக்கு அனுப்பியதாகக் கூறினார், இது விதிகளின் தொழில்நுட்ப மீறல் என்றும், எனவே நான் செல்வது சரியானது என்றும் அவர் கூறினார்.