நைஜரின் இரு கிராமங்களில் ஒரே நேரத்தில் இடம்பெற்ற தாக்குதல்: 70 பேர் பலி
மாலியுடன் எல்லை மண்டலத்திற்கு அருகிலுள்ள நைஜரின் இரு கிராமங்களில் ஒரே நேரத்தில் சனிக்கிழமையன்று தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 70 க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி டொம்பாங்கோ கிராமத்தில் சுமார் 49 கிராம மக்கள் கொல்லப்பட்டதுடன் பேர் காயமடைந்தனர் என்று பாதுகாப்பு வட்டாரங்களில் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் ஸாரூம்தரேய் கிராமத்தில் சுமார் 30 கிராமவாசிகள் கொல்லப்பட்டதாக நைஜரின் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுப்படுத்தியுள்ளார்.
சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதல்கள் நடந்த பகுதி, மங்கைஸ், நைஜர், மாலி மற்றும் புர்கினா பாசோவின் எல்லைகள் ஒன்றிணைக்கும் ஒரு பரந்த மற்றும் நிலையற்ற பிராந்தியமான தில்லாபெரியில் அமைந்துள்ளது.