பாதுக்காப்பு படையினர் நடாத்திய வான்வழி தாக்குதல்... பரிதாபமாக உயிரிழந்த 10 பொதுமக்கள்!
நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் என நினைத்து பாதுகாப்பு படையினர் நடாத்திய வான்வழி தாக்குதலில் 10 பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நைஜீரியாவில் பல பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் இயங்கி வருகின்றன.
இவர்கள் அடிக்கடி பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பலர் உயிரிழந்து வருகின்றனர். பயங்கரவாத குழுக்களுக்கு ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நைஜீரியா சொகுடா மாகாணம் சிமிலி என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் அந்த பகுதியில் வான்வழித் தாக்குதல் நடாத்தியுள்ளனர். மேலும் சரமாரியாக குண்டுகளை வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்கள் குழு என நினைத்து தவறுதலாக நடத்திய தாக்குதலால் 10 பேரும் உயிரிழந்த நைஜீரியா ராணுவம் தெரிவித்திருக்கிறது.