பாரிஸில் இரவில் நடந்த பயங்கரம்; பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை!
பாரிஸின் 13வது வட்டாரத்தில் பை ஒன்றுக்காக நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு வீதியில் தனியாக சென்றுக் கொண்டிருந்த நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 49 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெள்ளிக்கிழமை இரவு வீதியில் செ்னறுக்கொண்டிருந்த நபரை குழுவொன்று கொடூரமாக தாக்கியுள்ளது.
அந்த நபரின் கையில் இருந்த பையை திருடுவதற்காகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இறுதி வரையில் அந்த நபர் தனது பையை விட்டுக்கொள்ளாமல் பிடித்துக் கொண்டிருந்தமையினால் அந்த குழுவினர் மிகவும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
அந்த குழுவில் 5 இளைஞர்கள் இருந்ததாகவும் அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்கள் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போது அந்த குழுவினர் அவரது பையை திருடி சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு வந்த போது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டமையினால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேவேளை கடந்த நாட்களாக பாரிஸில் வன்முறை மற்றும் கொலைகள் அதிகரித்துள்ளமையினால் இரவில் தனியாக பயணிப்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இரவில் தனியாக செல்பவர்கள் பெறுமதியான பொருட்கள் கொண்டு செல்வதனை தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.