கனடாவில் ஆயுட்காலம் உயர்வு ; நிபுணர்கள் எச்சரிக்கை
கனடாவின் சமீபத்திய ஆயுட்கால புள்ளிவிவரங்கள், மக்கள் மீண்டும் சிறிது காலம் கூடுதலாக வாழ்கிறார்கள் என்பதைக் காட்டினாலும், அது நீண்டகால நம்பிக்கை தரும் போக்கு அல்ல என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
2022-இல் 81.3 ஆண்டாக இருந்த பிறப்பிலேயே எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம், 2023-இல் 81.7 ஆண்டாக உயர்ந்துள்ளது.
இது கோவிட் 19 COVID-19 தொற்று பரவலுக்குப் பின் முதல் முறையாக உயர்வை பதிவு செய்துள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
பொதுவாக மரணங்களின் எண்ணிக்கை குறைந்தாலோ அல்லது மரணங்கள் பெரும்பாலும் முதிய வயதில் மட்டுமே நடந்தாலோ ஆயுட்காலம் அதிகரிக்கும். 2023-இல் கனடாவில் 7,162 போதைப்பொருள் விபத்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
இது இதுவரை பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கை என கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னதாகவே மித மிஞ்சிய போதை மருந்து பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய மரணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்னும் போதைப்பொருள் விபத்து மரணங்களின் தாக்கம் நீடிப்பதாகவும் ஆயுட்காலம் உயர்வடைவதில் இந்த காரணிகளும் முக்கியமானவ எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புகைபிடித்தல், மது அருந்துதல், உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால் உருவாகும் நீண்டநாள் நோய்களும் நாட்டின் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.