இந்தியர்கள் இல்லை, அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை ; டிரம்ப் AI மாநாட்டில் வலியுறுத்தல்
அமெரிக்க தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், இந்தியர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
AI மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், "நாம் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும்.
அமெரிக்கர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அமெரிக்கர்கள் தாங்கள் கவனிக்கப்படவில்லை என்று உணர்கிறார்கள்.
நாட்டில் கிடைக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்ற நாடுகளில் முதலீடு செய்கின்றன.
எனது நிர்வாகத்தின்போது இந்தக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன்" என்று தெரிவித்தார்.
பெரிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன.
இந்தியர்களை வேலைகளில் அமர்த்துகின்றன என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், "இங்குள்ள மக்களின் வாய்ப்புகளைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை. நீங்கள் அமெரிக்கர்களை புறக்கணிக்கிறீர்கள்.
AI பந்தயத்தில் வெற்றி பெற, சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு புதிய தேசபக்தி தேவை. இங்குள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் நாட்டை முதன்மைப்படுத்த வேண்டும்" என்று அவர் அழைப்பு விடுத்தார்.