ஆபத்தான Omicron மாறுபாடு.. தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அமெரிக்கருக்கு ஏற்பட்ட நிலை!
அமெரிக்காவில் புதிய வகை Omicron மாறுபாட்டால் ஒருவர் மரணம் அடைந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கொரோனாவை தொடர்ந்து புதிய வகை Omicron வைரஸ் உலக நாடுகளிடையே பீதியை உண்டாக்கி உள்ளது. இது வரை Omicron மாறுபாடு இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒருவர் Omicron காரணமாக உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் Omicron மாறுபாட்டால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பாக இது கருதப்படுகிறது.
50 வயதுக்கு உட்பட்ட இவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதன் பிறகும் அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தடுப்பூசி போடப்படாத நிலை மற்றும் அடிப்படை சுகாதார நிலைமைகள் காரணமாக அவர் அதிக ஆபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் கடந்த வாரம் பதிவான கொரோனா வைரஸ் தொற்றுகளில் 73% Omicron காரணமாக ஏற்பட்டது என்று நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே Omicron காரணமாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் மரணத்தை பிரிட்டன் அரசு அறிவித்தது. பிரிட்டனில் இதுவரை 12 பேர் Omicron காரணமாக இறந்துள்ளனர் மேலும் 104 பேர் தற்போது மருத்துவமனையில் உள்ளனர் என்று துணைப் பிரதமர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்..