கனடாவில் வீடு திருத்துதல் தொடர்பில் இடம்பெறும் மோசடிகள்?
கனடாவில் வீடுகளை பழுது பார்ப்பதாக கூறி மேற்கொள்ளப்படும் மோசடி குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக வீடுகளின் ஜன்னல்கள், கதவுகள் பழுது பார்த்து தரப்படும் எனக் கூறி மக்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கதவுகள் ஜன்னல்கள் திருத்தப்படும் எனவும் பழுது பார்க்கப்படும் எனவம் கூறி பல்வேறு நபர்களிடம் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தின் ஊடாக ஜன்னல் கதவுகள் பழுது பார்க்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் நோவா ஸ்கோசியா பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிலர் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரட் டில் மட்டும் பிரான்சிஸ் என்ற ஓய்வு பெற்றுக்கொண்ட தம்பதியினர் ஜன்னல் கதவுகளை பழுது பார்ப்பதற்காக 5200 டாலர்களை வழங்கியதாகவும் எனினும் பழுது பார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பலரிடம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.