கனடாவில் திடீரென முடக்கப்பட்ட பாடசாலை; காரணம் என்ன?
கனடாவில் பாடசாலையொன்று திடீரெக முடக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு பாடசாலையை பொலிஸார் முடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் காலை 8.00 மணியளவில் குறித்த பாடசாலை மூடக்கப்பட்டுள்ளதாக ஹால்டன் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹோக்வில் ட்ரபல்கார் உயர் நிலைப் பாடசாலையே இவ்வாறு மூடப்பட்டது.
எவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை அதிகாரிகள் பகிரங்கப்படுத்தவில்லை.
எவ்வாறெனினும் இந்த அச்சுறுத்தல் சம்பவத்தினால் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டாம் என பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ட்ரபல்கார் பாடசாலை முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் பதிவு மூலம் பொலிஸார் அறிவித்திருந்தனர்.