மாண்ட்ரீல் சம்பவத்தில் மாயமானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
ஓல்ட் மாண்ட்ரீலில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து மாயமானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
வியாழனன்று ஏற்பட்ட பாரிய தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து மாயமானவர்கள் எண்ணிக்கை 7 என தெரியவந்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தொடர்புடைய கட்டிடத்தில் சில பகுதியை இடிக்கும் பணியானது ஞாயிறு பகல் தொடங்க இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்திருந்தனர்.
மாயமானதாக கூறப்படுவோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றே பொலிசார் நம்புகின்றனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் இதுவரை அந்த கட்டிடத்திற்குள் நுழையவில்லை.
ஊழியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு கட்டிடத்தில் ஒருபகுதி இடிக்கப்படும்.
தீவிபத்தானது திட்டமிட்ட குற்றச்செயலா என்பது தொடர்பில் விசாரிக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.