கனடாவில் அதிகளவில் களவாடப்படும் பொதிகள்
கனடாவில் அதிக அளவில் பொதிகள் களவாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டில் கனடாவில் விநியோகம் செய்யப்படும் பொதிகளை பெற்றுக் கொள்ளும் கனடியர்களில் பத்தில் ஒருவர், பொதிகள் களவாடப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 9ம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையில் ஆங்கியுஸ் ரைட் என்ற நிறுவனம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டுள்ளது.
இதன் போது 67 வீதமான வாடிக்கையாளர்கள் பொருட்கள் களவாடப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
வீடுகளுக்கு கொண்டு சென்று வினியோகம் செய்யப்படும் பொதிகளும் இவ்வாறு களவாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அநேகமான சந்தர்ப்பங்களில் இவ்வாறு பலர் பொதிகளை இழக்க நேரிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.